Connect with us

latest news

OTT Watch: நாங்க என்னைக்குமே கெத்துதான்… கேரளா கிரைம் ஃபைல்ஸ் சீசன் 2 வெப்சீரிஸ்… எப்படி இருக்கு?

Kerala Crime Files 2: கேரள போலீஸாரை நடத்தும் விசரணையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் த்ரில்லிங் கேரளா வெப் சீரிஸ் சீசன்2ல் பாசிட்டிவ் மற்றும் மைனஸ் பேசும் சிறப்பு தொகுப்புகள்.

முந்தைய சீசனுக்குப் பத்து ஆண்டுகளுக்கு கழித்து நடைபெறுவதாக இரண்டாவது சீசன் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு போலீஸ் அதிகாரியான அம்பிளி ராஜு காணாமல் போய்விடுகிறார். அவரை தேட எஸ்ஐ நோபிளின் தலைமையில் விசாரணை தொடங்குகிறது.

இதன் பின்னணியில் என்ன நடந்தது. அவர் எப்படி வெளியேறினார் என்பது குறித்தும் போலீஸ் துறையின் சொல்லப்படாத இருட்டு முகங்கள் குறித்து சொல்வது தான் கேரளா கிரைம் பைல்ஸ் சீசன்2. 30 நிமிடங்களை கொண்டு ஆறு எபிசோட் என்பதால் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது.

முதன்மை கேரக்டர்களாக நடிக்கும் அர்ஜூன் ராதாகிருஷ்ணன் மற்றும் அஜு வர்க்கீஸ் தங்களது நடிப்பில் அவர்களின் கேரக்டர்களாகவே நம் முன் நிற்கின்றனர். எங்குமே இதை கதை என யோசிக்க முடியாத அளவுக்கு பரபரப்பாகவே செல்கிறது.

பஹுல் ரமேஷின் எழுதும் ஸ்டைலில் வெப்சீரிஸ் அழுப்பை தட்டாமல் இருக்கிறது. மேலும், இயக்குனர் அகமது கபீர் தன் பாணியில் வெப்சீரிஸுக்கு மேலும் பலம் சேர்க்கிறார். படம் மிக இயல்பாகவும், உண்மையின் அடிப்படையிலும் நகர்கிறது.

இதுமட்டுமல்லாமல் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்துடனே ஒன்றுகிறது. தேவையில்லாத காட்சியை இணைக்காமல் கதைக்கு தேவையான விஷயங்களை இணைத்திருக்கின்றனர். மேலும் பின்னணி இசை கதையின் சூழ்நிலையைப் பதற்றமிக்கவையாக மாற்றுகிறது.

அதிரடி காட்சிகளை இல்லாமல் மென்மையான இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லரான இந்த வெப்சீரிஸ் கண்டிப்பாக வொர்த் வாட்ச் என்பது உண்மைதான். அதிலும் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் சூப்பர் ஹிட் அடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top