Connect with us

latest news

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? படைத்தலைவன் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொல்வது என்ன?

Padaithalaivan: விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜயகாந்தின் நடிப்பு இன்று வரை ரசிகர்களால் பாராட்டை குவித்து வருகிறது. ஆனால் அவர் இறப்புக்கு பின்னர் அவரின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியனுக்கு கோலிவுட்டில் இருந்து ஆதரவு பெருகியது.

இதனால் அவரின் அடுத்த படமான படைத்தலைவன் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. வால்டர் மற்றும் ரெக்லா படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் படைத்தலைவன் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பை இளையராஜா செய்திருக்கிறார்.

திரைக்கதை முழுவதும் காட்டின் தீவில் நடக்கிறது. யானை பின்னணி, காட்டுக்குடிமக்கள் வாழ்க்கை, அவர்களின் இயற்கை மீது சார்ந்த உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

யானை மற்றும் மஹவுட் இடையேயான உறவை மையமாகக் கொண்டு, அதில் ஏற்படும் சவால்களையும் விவரிக்கிறது. அதிர்ச்சியான திருப்பங்கள் மற்றும் த்ரில்லிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இதுகுறித்து தங்களின் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சண்முக பாண்டியன் மாதிரி நடிகர்களுக்கு நடிப்பு அவர்கள் ரத்தத்திலே ஊறுவிடுகிறது. கதை மட்டுமே இயக்குனர் சொல்லி இருப்பார்கள் என்கின்றனர்.

முதல் காட்சியில் கேப்டன் சார் வந்தது நன்றாக இருந்தது. படத்தில் எமோஷன் நன்றாக இருக்கிறது. அதுபோல யானை மற்றும் அவருக்கு இடையேயான காட்சிகள் உணர்வு பூர்வமாக அமைந்துள்ளது. சண்முக பாண்டியன் கடின உழைப்பு இதில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் விஜயகாந்தை போலவே அவரின் மகன் சண்முக பாண்டியனும் சண்டை செய்கிறார். பொட்டு வச்ச பாடல் மிகப்பெரிய அளவில் இருந்தது. கிளைமேக்ஸ் காட்சி உணர்வு பூர்வமாக இருந்தது. படம் ஃபாஸ்டா சென்று கொண்டே இருந்தது.

ட்விஸ்ட் எல்லாம் கணிக்கவே முடியவில்லை. லவ் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. படத்தில் எல்லாமே நன்றாக அமைந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top