Connect with us

latest news

இதுக்கு தான் இந்த பில்டப்பா? உள்ள ஒன்னுமே இல்ல… பரமசிவன் பாத்திமா திரைவிமர்சனம்!…

Paramashivan Fathima: தமிழ் சினிமாவின் முக்கிய காண்ட்ரவர்சி கதையான இந்து – கிறிஸ்டின் பிரச்னையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் பரமசிவன் பாத்திமா. இப்படத்தின் பிளஸ் மைனஸ் பேசும் திரை விமர்சனம் இங்கே.

இந்து விமல், கிறிஸ்டியனாக ஹீரோயின் சாயா தேவி, ஃபாதராக எம்.எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இயக்குனர் எசக்கி கர்வண்ணன் இயக்கத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.

படம் திண்டுக்கலை அடுத்து சிறுமலையில் இருக்கும் மூன்று கிராமத்தை சொல்லுகிறது. ஒரு கிராமம் முழுக்க முழுக்க இந்துக்கள் வாழும் சுப்ரமணியபுரம். இன்னொரு கிராமம் கவர்மெண்ட் வேலைக்காக மதம் மாறும் மக்கள் இருக்கும் யோக்கபுரம்.

இதனாலயே இரண்டு கிராமத்துக்கும் பத்திக்கிட்டு எறியுது பஞ்சாயத்து. மறுபக்கம் ஒரு ரிசப்ஷன் நடக்குது. அதில் மேடையில் ஆடும் ஒரு பெண்ணை பார்த்து மாப்பிள்ளை ஜொல்லு விடுறாரு. அவர் கண்ணை காட்ட மாப்பிள்ளை தனியாக செல்கிறார்.

பின்னர் அந்த மாப்பிள்ளையை கதாநாயகி, கதாநாயகன் சேர்ந்து தண்ணி தொட்டிக்குள்ள முக்கியே கொன்னுடுறாங்க. இதை தொடர்ந்து இன்னொரு ரிசப்ஷன் மாப்பிள்ளை கொல்லப்படுறாரு. இது தொடர் கதையாக எல்லாரும் கல்யாணாம் செய்யவே பயப்படுறாங்க.

இதை விசாரிக்க களத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறார். அவர் இந்த கொலைக்கான காரணத்தை கண்டுப்பிடித்தாரா? ஏன் இவர்கள் இதை செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் மொத்த கதையாக இருக்கிறது.

இரண்டாம் பகுதியில் நிறைய கான்ட்ராவர்சியான விஷயங்களை பேசி இருக்கிறார். அதை அடித்து உடைத்து பேச நினைத்து இருக்கிறார் இயக்குனர் எசக்கி கார்வண்ணன். சில காட்சிகள் நன்றாகவே அமைந்துள்ளது. மதம் மாறுனதுக்கும், மதம் மாறாம இருக்கவங்களுக்கும் இடையில் நடக்கிறத தான் மத கலவரம்னே சொல்றாங்க என்ற வசனம் அட ரகம்.

படத்தில் விமல், சாயா தேவி, எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரம் மட்டுமே அப்ளாஸ் வாங்கி இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் எல்லாமே லாஜிக் இல்லாத அமெச்சூர் ரகமாக இருக்கிறது. அதனாலயே பல கதாபாத்திரங்கள் நம்முடன் ஒட்டாமலே இருக்கிறது.

இசையமைப்பாளர் தீபன் சக்கிரவர்த்தியின் இசை ஓரளவு நன்றாகவே அமைந்து இருக்கிறது. இரண்டாம் பகுதியில் வர பூங்காற்று பாடலை கேட்டாலே சத்யா படத்தின் வலையோசையின் அப்பட்டமான இன்ஸ்பிரேஷன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முதல் பகுதியில் பில்டப்புடன் தொடங்கினாலும் இரண்டாம் பகுதி ஸ்டேஜிங் சரியாக அமையவில்லை. ஒரு சீரியஸான கதைக்களம். ஆனா அதை சீரியஸா ஆரம்பிச்சு சுவாரஸியமா போற நேரத்தில் மொக்கை காமெடி பண்ணியும், ரொமான்ஸ் பண்ணியுமே கலைச்சி விட்டுவிடுகின்றனர்.

இன்ஸ்வெட்டிகேட்டிவ் கதையாக ஆரம்பித்தாலும் அதிலும் லாஜிக் பிரச்னை. போலீஸ் எல்லா தெருக்களிலும் மைக் போட்டு கில்லரை கண்டுபிடிக்க போறதை சொல்ல என்னங்கப்பா என நமக்கே இம்சையாக இருக்கிறது. பில்டப்புடன் ஆரம்பித்தாலும் படம் செம சறுக்கல்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top