Connect with us

latest news

அப்பா பையன் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆச்சா? இயக்குநர் ராமின் பறந்து போ எப்படி இருக்கு?

வழக்கமா மொக்கை காமெடியை ஸ்டைலா வச்சிக்கிட்டு மிர்ச்சி சிவாவின் படங்கள் நிறைய வந்துள்ளது. ஆனால் இதுல கொஞ்சம் வேறுபட்ட சிவாவைப் பார்க்கலாம். அதுதான் இன்று வெளியான பறந்து போ படம். அப்பா மகன் சென்டிமென்ட் இதுல எப்படி ஒர்க் அவுட் ஆகியிருக்கு. படத்தைப் பார்க்கலாமா? வாங்க பார்ப்போம்.

அப்பா பையன் இருக்குறது சொந்த பிளாட். அதுக்கான இஎம்ஐ பிரச்சனையில அப்பா ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறார். அம்மா கோவையில புடவை எக்ஸ்போ வச்சி அதுல சம்பாதிக்கறதுக்காகப் போறாங்க.

கடன்காரங்க தொல்லையில இருந்து தப்பிக்க மிர்ச்சி சிவா பையனைக் கூட்டிட்டு பாட்டி வீட்டுக்குப் போறாரு. அம்மாவுக்கு அப்பப்போ அப்பா அப்டேட் கொடுக்குறாரு. அப்பா, மகன் உறவில் என்னென்ன நடக்குது? பையனுக்கு அப்பா என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்குறாரு? யார் யாரை எல்லாம் இவங்க சந்திக்கிறாங்க என்பதுதான் படத்தின் கதை.

தங்களின் குழந்தைகள் முன்பு வெற்றி பெறுவதற்காகப் போராடும் அனைத்து அப்பாக்களுக்கும், அம்மாக்களுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம் என டைட்டில் போடுகிறார்கள்.

மிர்ச்சி சிவா மத்த படங்களை விட இதுல சீரியஸாகவும் சிறப்பாக நடித்துள்ளார். சென்னை 28, கோவா, தமிழ்ப்படம் வரிசையில் சிறப்பாக நடித்துள்ளார் மிர்ச்சி சிவா. மிதுல் ரய்யன் துடிப்போடு வயசுக்கே உண்டான ஃபீலிங்கோட நடித்துள்ளார். இது வழக்கமான தமிழ்சினிமா இல்ல.

ஆனா இந்த காம்போவை இயக்குனர் ராம் சிறப்பாக கொண்டு போய் உள்ளார். பையன் வீட்டுல தனியா இருக்கான்… ரோட்டுல தனியா நடந்து போறான் என்னமோ ஆகப்போகுதுங்கற ஒரு பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு தடவையும் பையனுக்காக அப்பா மலையேறித்தான் ஆகணும். தெரிஞ்சிக்கிட்டுத்தான் ஆகணும். மாத்திக்கிட்டுத்தான் ஆகணும்கறதை மெசேஜா சொல்லாம அட்வைஸா சொல்லாம விஷூவலா புரிய வச்சிருக்காரு இயக்குனர் ராம்.

வழக்கத்தை உடைக்கிறது இயக்குனர் ராமின் எழுத்து என்றே சொல்லலாம். பையன் தொலையும் போதெல்லாம் சிவா கொஞ்சம் எக்ஸ்ட்ரா பயத்தை பாடி லாங்குவேஜ்ல காட்டிருக்கலாம். தமிழ் சினிமாவில் அரிதான வில்லன் இல்லாத படம். குழந்தைகள் என்ஜாய் பண்ணிப் பார்க்குற படம் இதுதான்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top