Connect with us

latest news

மனைவியை குக்கரில் சமைத்த கணவன்… காரணமான ’சூக்சமதர்ஷினி’… ஓடிடியில் பாக்க போற முன்ன இத படிங்க…

OTT: சமீபத்தில் ஒரு வழக்கில் கணவன் மனைவியை கொன்று அவரின் எலும்புகளை குக்கரில் சமைத்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அப்படத்தில் என்னதான் இருக்குனு யோசிக்கிறவங்களுக்கு இந்த தொகுப்பு.

மலையாளத்தில் ஜித்தின் இயக்கத்தில் வெளியான சூச்சமதர்ஷினி படத்தில் பேசில் ஜோசப் மற்றும் நஸ்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 22 நவம்பர் வெளியான இப்படம் உலகளவில் 55 கோடி வரை வசூல் செய்தது.

சமீபத்தில் இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. கிரைம் திரில்லர் திரைப்படம் என்றாலே ஹாரர் எவக்டில் இருக்க வேண்டுமா? காமெடியுடன் ஒரு திரில்லர் ஜானரை சொல்லி இருப்பதற்கு இயக்குனர் சபாஷ் வாங்கி இருக்கிறார்.

பிரியா என்ற இல்லத்தரசி பெண் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அப்பொழுது அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் பேக்கரி ஓனரான மேனுவல் தன் தாயுடன் குடி வருகிறார். அவர் வந்து சில நாட்களில் தாய் காணாமல் போக அவரை தேடி கண்டுபிடிக்கின்றார்.

அவர் காணாமல் போனதற்கு அம்னீசியா தான் காரணம் எனக் கூற அருகில் வசித்து வரும் பிரியாவிற்கு அவர் மீது சந்தேகம் வருகிறது. அம்னீசியா இருக்கும் அவர் சரியாக வீட்டு வேலைகளை செய்வதை குறித்து மேனுவல் மீது சந்தேகம் படுகிறார்.

ஒரு கட்டத்தில் தாய் மொத்தமாக தொலைந்து விட இவர்தான் அவரை ஏதோ செய்து விட்டதாக கூறி பிரியா தன்னுடைய டிடெக்டிவ் வேலைகளை தொடங்குகிறார். தாய் தொலைந்த போது அங்கு வருகிறார் மேனுவல் அக்கா டயானா. அவருடன் பிரியா நட்பாகி விடுகிறார்.

மேனுவல் வீட்டில் விசித்திரமாக சில விஷயங்கள் நடக்கிறது. ஒருவர் அங்கு இருந்து குறிப்பிட்ட திரவத்தை பாத்ரூமில் ஊற்றிக்கொண்டு இருக்கிறார். பிரியா சந்தேகம் கொண்டு வீட்டை நோட்டம் விடுகிறார். அப்போது சரியாக அங்கு மேனுவல் வர பிரியா தப்பித்துவிடுகிறார். சுவற்றில் ரத்த கறை குறித்து மேனுவல் பார்த்து விடுகிறார்.

போலீசார் முதல் பிரியா வரை அவருடைய தாயை தேடிக் கொண்டிருக்க ஒருநாள் திடீரென அவர் வீட்டிற்கு வந்து விடுகிறார். பிரியா யோசித்தது எல்லாம் போயிட்டு விடுகிறது. அவ்வளவுதான் பிரியா தேவையில்லாமல் சந்தேகம் கொள்வதாக தோழிகளே கூறி விடுகின்றனர்.

இருந்தும் பிரியா சந்தேகப்பட்டு அந்த வீட்டின் சுவரில் இருந்த ரத்த கரையை லேபிற்கு அனுப்பி விட்டு தன்னுடைய வேலையின் இன்டர்வியூவிற்கு வருகிறார். அதே நேரத்தில் மேனுவல் தன்னுடைய குடும்பத்துடன் அந்த ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்து காரில் சென்று கொண்டிருக்கிறார்.

அப்பொழுது டயனாவிற்கு கால் செய்து பார்க்க போன் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. அதுவும் தமிழில் வர பிரியாவிற்கு சந்தேகம் கொண்டு அவருடைய சமூக வலைத்தள பக்கத்தை கண்டுபிடித்து டயானா ஒரு லெஸ்பியன் எனத் தெரிந்து கொள்ள அவருடைய காதலியை கண்டுபிடிக்கிறார்.

அப்போதே கொலை செய்யப்பட்டது பிரியாதான் என தெரிகிறது. என்ன செய்தார் என யோசிக்கவும் செய்கிறது. அந்த காதலி டயானாவை தேடி இந்தியா வர அவரை காலி செய்ய பிளான் போடுகின்றனர். இது யார் ஐடியா எனப் பார்த்தால் அந்த அமைதி அம்மாதான் காரணம் எனத் தெரிகிறது.

டயானா காதலியை பிரியா எப்படி கண்டுப்பிடித்தார். அவரை காப்பாற்றி மேனுவல் பிடிக்க என்ன செய்தார் எனவும் கிளைமேக்ஸ் பார்த்து தெரிந்து கொள்ளுங்க. நீங்க ஓடிடி பிரியராக இருந்தால் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இருக்கும் சூக்சமதர்ஷினி படத்தினை மிஸ் செய்யாமல் பார்த்திடுங்க.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top