Connect with us

latest news

‘மாமன்’ஆக மாஸ் காட்டினாரா?.. அல்லது மண்ணை கவ்வினாரா சூரி?.. மாமன் விமர்சனம் இதோ!

வெற்றிமாறன் பார்த்த வேலையால் காமெடி நடிகராக இருந்த சூரி சீரியஸ் மோடுக்கு விடுதலை படத்தில் இருந்தே மாறிவிட்டார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்தில் மேலும், கொடூரமாக நடித்திருந்தார். ஆனால், வில்லேஜ் சப்ஜெக்ட் படமான மாமன் படத்தில் அவர் சிரித்து நடிக்க நிறைய இடங்கள் இருந்தும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் சூரி நீங்க ஹீரோ சிரிக்கவே கூடாதுன்னு சொல்லிவிட்டாரா என்னவோ தெரியவில்லை மனுஷன் கடைசி வரைக்கும் ஒரே பர்ஃபார்மன்ஸ் தான்.

லட்டு போல ஹீரோயினாக ஐஸ்வர்யா லட்சுமி கிடைத்த இடத்தில் காமெடி காட்சிகளுக்கு கட் அண்ட் ரைட்டாக தடை போட்ட சூரி, கட்டிப்பிடித்து முத்தமழை பொழியும் காட்சிகளில் எல்லாம் தனக்கு வேண்டியதை தாராளமாக எடுத்துக் கொண்டார். சூரியுடன் எந்தவொரு தயக்கமும் இன்றி ஐஸ்வர்யா லட்சுமி மற்ற ஹீரோக்களுடன் எப்படி ரொமான்ஸ் செய்வாரோ அதே போலத்தான் நெருங்கி பழகி கட்டி உருண்டு நடித்திருக்கிறார்.

அக்காவாக வரும் சுவாசிகா திடீரென வில்லியாக மாறி தம்பியே செத்துட்டான் என தனது மகனிடம் சொல்லும் இடங்களும் அதன் பின்னர், தம்பியின் மனைவியை எதிர்கொள்ள முடியாமல் பால சரவணன் திருமண விழாவில் ஓடும் காட்சிகளும் நிறைவான நடிப்பை அவர் வெளிப்படுத்த துணையாக நிற்கிறது.

லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு பிறகு ரெட்ரோ, மாமன், சூர்யா 46 என தொடர்ந்து பல படங்களில் சுவாசிகா நடித்து வருகிறார். மருமகனாக நடித்துள்ள சிறுவன் மாமனான சூரியுடனே தூங்கும் பழக்கம் கொண்டிருக்கிறான். திருமணத்திற்கு பிறகு முதலிரவு அறைக்குள் அந்த குட்டி பையன் செய்யும் சேட்டைகள் மட்டுமே படத்தில் ரசிக்க வைக்கிறது.

ஆனால், அதே ரிப்பீட் மோடில் தொடங்க ஐஸ்வர்யா லட்சுமியால் ஹனிமூனுக்கு கூட போக முடியாமல் தவிக்க வில்லங்கம் விஸ்வரூபம் எடுக்கிறது. மாமனையும் மருமகனையும் பிரித்து தனக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்து விட்டது என மதுரைக்கு கிளம்பி போய் ஜாலியான இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். அவரும் மாசமாக ஆனதும் மீண்டும் தனது அக்காவையும் மருமகனையும் பார்க்க நினைக்கும் சூரிக்கு அக்கா பண்ண காரியம் தெரிய வர மீண்டும் அவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த மாமன் படம்.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ரொமான்ஸ் போர்ஷன்கள் வடிவேலு அசின் உடன் ஆடும் சுட்டு விழிச் சுடரே பாடல் போலத்தான் தெரிகிறது. விமல் மேஜிக் மேனாக வரும் காட்சி சூப்பராக உள்ளது. இன்னும் கொஞ்சம் கதையை சுவாரஸ்யப்படுத்தி நகைச்சுவை காட்சிகளை சேர்த்திருந்தால் மாமன் மாஸ் காட்டியிருப்பார்.

ரேட்டிங்: 2.5/5.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top