Connect with us

latest news

Thuglife review: கமல், சிம்பு கூட்டணி வென்றதா? தக் லைஃப் படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்க?

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு முதன் முறையாக இணைந்துள்ள படம் தக் லைஃப். இவர்களுடன் இணைந்து திரிஷா, அபிராமி, அசோக்செல்வன், நாசர், ஜோஜூஜார்ஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே அருமை.

ஏஆர்.ரகுமான் இசையில் ஜிங்குச்சா, விண்வெளி நாயகா, முத்தமழை, என்ன வேணும் உனக்கு, அஞ்சு வண்ணப் பூவே என படத்தில் அத்தனைப் பாடல்களுமே மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கின்றன. திருமணப்பாடலான ஜிங்குச்சாவில் கமலும், சிம்புவும் போடும் ஆட்டம் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பாக இருப்பதாகப் படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். வேறு என்னவெல்லாம் சொல்றாங்கன்னு பாருங்க.

கமலின் தீவிர நடிப்பு, சிலம்பரசனின் எனர்ஜியான ரோல், மணிரத்னத்துக்கே உரிய சிறப்பான இயக்கம் படத்தை ரசிக்க வைக்கிறது. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், 2ம் பாதி வேகமாகவும் செல்வதாக தெரிவித்து வருகின்றனர்.

படத்தில் யூகிக்க முடிகிற அளவில் கதை இருந்தாலும் சம்பவங்கள் தரமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் பாதி பார்த்த ரசிகர்கள் 2ம் பாதியில் பல திருப்பங்கள் இருக்கும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கமல் ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் படம் பார்க்க ஆவலுடன் வந்து கொண்டுள்ளனர். படம் சிறந்த பொழுதுபோக்காக இருப்பதால் நிச்சயமாக கமர்ஷியலாக ஹிட் அடிக்கும் என்றும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் பிளஸ் பாயிண்ட் கடைசி வரை வேகமாக செல்வதாகவும், மைனஸ் பாயிண்ட் என்றால் யூகிக்க முடிகிற திரைக்கதை என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கமலின் லெஜண்ட்ரியான நடிப்பு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது என்று சிலரும், சிம்பு வரும் காட்சிகள் மாஸாக இருப்பதாக சிலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் படத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் தமிழகத்தில் ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக உள்ளது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top