×

நீ ஒரு அணுகுண்டு... நடிகையைச் சீண்டிய சர்ச்சை இயக்குனர்

பாலிவுட்டின் நெப்போட்டிஸம் பிரச்சனை தலைதூக்கியபோதே கரண் ஜோஹர் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா முதல்முறையாக கங்கனா குறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார். 
 

ஷூட்டிங்கில் காயம்பட்ட நிலையில் இருந்த போட்டோ ஒன்றை ட்விட்டரில் நடிகை கங்கனா ரணாவத் பதிவிட்டிருந்தார். அந்த போட்டோ குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா, ``ஒரு புரபொஷனல் ஃபிலிம் மேக்கராக ஒரு நடிகரின் இவ்வளவு கடினமான குளோஸ் அப் போட்டோவைப் பார்த்ததில்லை. எந்தவொரு நடிகரின் போட்டோவையும் இதுபோன்ற ஒரிஜினாலிட்டியோ அல்லது இண்டன்சிட்டியோடு பார்த்ததாக எனக்கு நினைவில்லை. கங்கனா, நீ ஒரு அணுகுண்டுதான்’’ என்று பதிவிட்டிருந்தார். 

ஆரம்பம் முதலே கங்கனா எதிர்ப்புத் தெரிவித்துவந்த கரண் ஜோஹர் உள்ளிட்டோருக்கு ஆதரவு தெரிவித்து வந்த ராம்கோபால் வர்மா, கங்கானா குறித்து வாய் திறக்காமல் அமைதியாக இருந்துவந்தார். ஆனால், தற்போது அவர் முதல்முறையாக கங்கனா குறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அந்த ட்வீட்டை ராம்கோபால் வர்மா டெலீட் செய்துவிட்டார். அவர் உண்மையில் கங்கனாவைப் பாராட்டி அந்தப் பதிவை இட்டாரா அல்லது சர்க்காஸமாகக் கலாய்க்கும் வகையில் ட்வீட்டினாரா என்பது ராம்கோபால் வர்மாவுக்கே வெளிச்சம். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News