×

குடுத்த காசுக்கு மேல கூவமாட்டேன்...  ஆரவ் மாதிரி இல்லை நான்! கெத்து காட்டிய ரித்விகா

பிக் பாஸ் நான்காவது சீசன் அக்டோபர் 4ம் தேதி துவங்க உள்ள நிலையில் அதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். 
 

நாட்கள் கவுன்ட்டவுன் குறிப்பிடும் விதமாக தினமும் ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.இன்னும் 2 தினங்கள் மட்டுமே இருக்கிறது  என கூறி கமலஹாசன் பேசி இருந்த வீடியோ ஒன்று வெளிவந்து இருந்தது.

பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ் பேசும் விதத்தில் ப்ரொமோ வீடியோ வெளியாகி இருந்த நிலையில் இரண்டாவது சீசன் வெற்றியாளர் ரித்விகா பேசும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது . அதனால் நாளை மூன்றாவது சீசன் வின்னர் முகென் ராவ் பேசுவது போல வீடியோ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரவ் பேசி இருந்த வீடியோவில் பிக் பாஸ் தன் வாழ்க்கையையே மாற்றி விட்டது என்று நெகிழ்ச்சியாக பேசி இருந்தார். ஆனால் ரித்விகா அப்படி எதுவும் சொல்லவில்லை நாளை மறுநாள் துவங்க உள்ள பிக் பாஸ் ஷோவை மறக்காமல் பாருங்கள் என்று மட்டும் கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிகின்றது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News