தனுஷின் அரசியல் ஆசை: இப்படி சொல்லிட்டாரே விஜயின் ஆஸ்தான ஜோதிடர்

திரையுலகிலிருந்து அரசியலில் நுழைந்த விஜய் பெற்ற வெற்றிக்கு பின் பலருக்கும் அரசியல் ஆசை ஆட்டிப்படைக்கிறது. அந்த வகையில்  நடிகர் தனுஷுக்கும்
 
dhanush

திரையுலகிலிருந்து அரசியலில் நுழைந்த விஜய் பெற்ற வெற்றிக்கு பின் பலருக்கும் அரசியல் ஆசை ஆட்டிப்படைக்கிறது. அந்த வகையில்  நடிகர் தனுஷுக்கும் அரசியல் ஆசை வந்திருப்பதாகவே தெரிகிறது. அண்மையில் தனுஷ் ரசிகர் மன்ற கொடி அறிமுகப்படுத்தப்பட்டு அது சமூக வலைதளங்களில் வைரலானது.  அதுமட்டுமின்றி அவரது சமீபகால நடவடிக்கைகள் அதனை உறுதிபடுத்துவதாகவே பலர் கூறுகின்றனர். குறிப்பாக முதல்வர் விஜயை  அவர் பின்பற்றுவது அவரது பேச்சிலேயே தெரிகிறது. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தனுஷ், இங்கு கூடியிருக்கும் கூட்டம் சதாரண கூட்டம் அல்ல. இங்கு இத்தனை பேர் கூடியிருக்கிறீர்கள். நம்முடைய ஒற்றுமைக்கு பெரிய சக்தி உண்டு. அதற்கு சரியான நோக்கமும் இருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வந்தோம், புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்  என இருந்துவிடக்கூடாது. உங்களைச் சுற்றியிருக்கும் மக்களை கவனியுங்கள். அவர்களுக்கு பிரச்சினை என்றால் உதவுங்கள்.  மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்யுங்கள் என்று பேசினார். 

இந்த நிலையில் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் நிச்சயம்  திமுக மற்றும் அதிமுக வாஷ் அவுட் ஆகும். ஏனென்றால்  தனுஷின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறது. அரசியலில் ரிஸ்க் எடுக்க தனுஷ் தயாராக இருந்தால் 2031 ஆம் வருடம் விஜய் vs தனுஷ் என்று அரசியல் களம் மாறும்  எனக் கூறியிருக்கிறார். இது  தனுஷ் ரசிகர்களுக்கு முகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web