×

பிக்பாஸுக்கு செல்வதை ட்விட் செய்து உறுதிப்படுத்திய ரியோ ராஜ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதை உறுதிப்படுத்திய நடிகர் ரியோ

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்ற  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4ம் தேதி இன்று முதல் ஒளிபரப்பாகிறது. இதில் ரம்யா பாண்டியன் ஷிவானி நாராயணன் உள்ளிட்டர் சிலர் பங்கேற்பது எப்போதோ உறுதியாகி விட்டது.

இதில் நடிகர் ரியோ பங்கேற்பதாக சில தினங்களுக்கு முன்னர் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்ப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னுடைய முடிவு உங்களை ஏமாற்றலாம். ஆனால், என்னுடைய செயல்பாடுகள் உங்களை ஏமாற்றாது என கூறி பதிவிட்டுள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அண்மையில் ஷிவானி நட்சத்திர ஹோட்டலில் இருந்து போட்டோ வெளியிட்ட அதே இடத்தில் நின்று தான் ரியோ இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். ஆக ரியோவும் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு பிக்பாஸில் பங்கேற்பது உறுதியாகிவிட்டது. ஆனால், கொடுத்துள்ள கேப்ஷன் தான் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News