தயாரிப்பாளராக களம் இறங்கும் ரியோ ராஜ்: முதல் படத்தின் தலைப்பு இதுதான்

 

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்தவர் ரியோ ராஜ். சிவகார்த்திகேயன் போன்றே இவருக்கும் சின்னத்திரையில் ரசிகரகள் அதிகம் உண்டு.

பின்னர் சிவகார்த்திகெயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூல்ம் வெள்ளிதிரைக்கு அறிமுகம் ஆனார். , தொடர்ந்து பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஜோ படம் வ்ருக்கான முதல் வெற்றியை கொடுத்தது. சமீபத்தில் வந்த ஆண் பாவம் பொல்லாதது நல்ல வெற்றியை கொடுத்தது அவருக்கு.

திரைத்துறையில் நடிகராக தன்னை நிருபித்த ரியோ, இப்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு ப்ரவுன் மணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக யூடியூபர் ராம் நிசாந்த் நாயகனாக நடிக்கிறார். கதிரவன் சம்பத் என்கிற புதிய இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில் இப்படத்திற்கான புரமோசன் வீடியோ இன்று வெளியானது.

https://youtu.be/eRnwqiL3LhA?si=4lNJoB9v1n-YcRqF

From Around the web