ரியோவின் காமெடி சரவெடி... வெளியானது ராம் இன் லீலா ட்ரெய்லர்!
'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் வெற்றிக்கு பிறகு ரியோ ராஜ் நடித்துள்ள புதிய ரொமான்டிக் காமெடி ஜானர் திரைப்படம் தான் 'ராம் இன் லீலா'.
இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக வர்திகா டூயட் பாடி ஆடியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார்.
இதற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார், மாலிக் அர்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இதன் ட்ரெய்லரை இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.
Very happy to launch the trailer of #RaminLeela ❤️https://t.co/CyHdb1540L
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 12, 2026
My hearty wishes to @rio_raj bro, @tridentartsoffl and the entire cast and crew of the team for this film to be a huge success 🤗❤️@eywaent @sude_v @sanjayvijayragh @srikumaranfilms @ramachandr5017…
இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.