காந்தாரா Chapter 2 க்கு தயாராகும் ரிஷப் ஷெட்டி

கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி  இயக்கிய நடித்த அந்த படம்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக கன்னட
 
kantara chapter 1

கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி  இயக்கிய நடித்த அந்த படம்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக கன்னட திரையுலகை வெளி உலகிற்கு கொண்டு சென்றதில் இந்த படத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. முதல் பாகத்தின் வரவேற்பை அடுத்து காந்தாரா Chapter 1 என்ற அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளீயானது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.  உலகளவில் கிட்டத்தட்ட ரூ. 850 கோடி வரை வசூல் செய்தது.

இந்த நிலையில் காந்தாரா Chapter 2 குறித்த அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. காந்தாரா பட இயக்குஅன்ரும் நடிகருமான ரிஷப் செட்டி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியபோது,   நான் நடிகராக பிஸியாக இருந்தாலும் எனது இயக்கத்தை கை விடவில்லை. இந்திய சினிமாவின் மிகப்பெரிஅய் ஹிட்டான காந்தாரா பிரான்சைஸின் அடுத்த பாகமான காந்தாரா Chapter 2 க்கான கதை களத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன் என்றார்.

இயக்குனராக பணிபுரியும் போதுதான் எனக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. எனது எழுத்தாளர்கள் குழுவுடன் இணைந்து இந்தப் படத்திற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டேன் என்றூ கூறினார்.
 

Tags

From Around the web