தந்தையை போலவே நடனத்தில் கலக்கும் ரிஷி தேவா

 
தந்தையை போலவே நடனத்தில் கலக்கும் ரிஷி தேவா

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா முதல் முதலாய் இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த ஆல்பத்தில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடி நடித்திருக்கிறார்கள். மெலோடியும், ராப் இசையும் கலந்த இந்த ஆல்பத்தில் உள்ள ராப் பாடலை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பி பெற்று வருகிறது. தந்தையை போலவே நடன காட்சிகளில் அசத்தியுள்ளார் ரிஷி. இந்தப் பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்ய , சுரேன் நடனம் அமைத்திருக்கிறார்.

ரிஷி தேவா - ஜி. வி பிரகாஷ் குமார் - ரவிச்சந்திரன் - கூட்டணியில் உருவாகி இருக்கும் 'முதல் முதலாய்' மியூசிக்கல் வீடியோ ஆல்பம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே நடிகர் பிரபுதேவா நடனமாடி பிரபலமான 'சிக்கு புக்கு ரயிலே.. பாடலை சிறுவயதில் ஜி. வி பிரகாஷ் குமார் பாடினார் என்பதும் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் 'முதல் முதலாய் ' மியூசிக்கல் வீடியோ ஆல்ப பாடலையும் ஜி. வி பிரகாஷ் குமார் தான் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான இசை நிறுவனமான சரிகம நிறுவனம் இந்த ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது.

https://youtu.be/Ty6CwDdCeKY?si=X94lWrydYPCp2S9N

From Around the web