×

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம்... 

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூருக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் மாதக் கணக்கில் சிகிச்சை பெற்றார்.

 

கடந்த செப்டம்பர் மாதம் நாடு திரும்பிய ரிஷி கபூருக்கு நேற்று திடீர் என்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷி கபூர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 67. அவருக்கு நீத்து கபூர் என்கிற மனைவியும், ரிதிமா என்கிற மகளும், ரன்பிர் கபூர் என்கிற மகனும் உள்ளனர்.

ரிஷி கபூர் இறந்த செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 2018ம் ஆண்டில் இருந்து புற்றுநோயுடன் போராடி வந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நேற்று உயிர் இழந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து பாலிவுட்காரர்கள் மீண்டு வருவதற்குள் ரிஷி கபூர் மரணம் அடைந்துள்ளார். இரண்டு நாட்களில் இரண்டு பிரபலங்களை பரிகொடுத்துவிட்டு பாலிவுட்காரர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

ரிஷி கபூரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்களும், பிரபலங்களும் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News