யார் போன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குறாரு ...ரிஷிகாந்துக்கு அட்வைஸ் கொடுத்த அந்தணன்!

தமிழ் சினிமாவில் சுமார் 15 ஆண்டுகளாக வாய்ப்புக்காகப் போராடி, சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், தற்போது அடுத்தடுத்து கிடைத்த இரண்டு படங்களின் வெற்றியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 
rishi kanth

தமிழ் சினிமாவில் சுமார் 15 ஆண்டுகளாக வாய்ப்புக்காகப் போராடி, சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், தற்போது அடுத்தடுத்து கிடைத்த இரண்டு படங்களின் வெற்றியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிலையில், வெற்றிக்குப் பிறகு ரிஷிகாந்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வலைபேச்சு அந்தணன் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ரிஷிகாந்துக்கு இந்த வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக சிறிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான வாய்ப்பைத் தேடி வந்தவர். இரும்புத்திரை ,  ஹீரோ ,  ராக்கி ,  இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், பெரிய அளவில் ரசிகர்களிடம் அவருக்கு அடையாளம் கிடைக்கவில்லை.  

தனது சினிமா பயணம் குறித்து ரிஷிகாந்தே சமீபத்தில் பகிர்ந்த பதிவில், 15 ஆண்டுகால பயணத்தில் பல போராட்டங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தார். தனக்கு தற்போது கிடைத்திருக்கும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றியும் தெரிவித்திருந்தார். 

motha rathiri

ரிஷிகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம்  மொத ராத்திரி . ராஜா கருப்பசாமி இயக்கிய இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்தார்.
இந்தப் படத்தை உருவாக்குவதற்கே சுமார் 6 ஆண்டுகள் போராடியதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆரம்பத்தில் இந்தக் கதையை திரைப்படமாக்க முயன்றபோது, ரிஷிகாந்தை கதாநாயகனாக வைத்தால் படம் எடுக்க முடியாது என்றும், அவருக்குப் பதிலாக வேறு ஒரு பிரபல நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்றும் பலர் கூறியதாக இயக்குநர் ராஜா கருப்பசாமி தெரிவித்திருந்தார். ஆனால் ரிஷிகாந்தை மாற்றாமல் அவரையே நாயகனாக வைத்து படம் எடுப்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார். படம் வெளியான பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் கிடைத்ததாகவும் படக்குழு தெரிவித்தது.   ஓடிடியில் வெளியான பின்னரும்  மொத ராத்திரி  கவனம் பெற்றது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் படம் டிரெண்டிங்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததாகவும் செய்திகள் வெளியாகின.  

மொத ராத்திரி  கொடுத்த அடையாளத்தைத் தொடர்ந்து ரிஷிகாந்துக்கு முக்கியமான படமாக அமைந்தது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின்  டோரதி . கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் ரிஷிகாந்தின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதனால் பல ஆண்டுகளாக தனக்கான ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கப் போராடி வந்த ரிஷிகாந்துக்கு, அடுத்தடுத்து  மொத ராத்திரி  மற்றும்  டோரதி  படங்கள் மூலம் புதிய அடையாளம் கிடைத்தது.

 

dorathy rishikanth


இந்த நிலையில்தான் ரிஷிகாந்தின் தற்போதைய நடவடிக்கை குறித்து வலைபேச்சு அந்தணன்  நேற்று வலைபேச்சி சேனலில் பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், மொத ராத்திரி ,  டோரதி  ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு ரிஷிகாந்திடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், யார் போன் செய்தாலும் அவர் எடுப்பதில்லை என்றும் அந்தணன் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக இயக்குநர்கள் தொடர்புகொள்ள முயன்றாலும் ரிஷிகாந்த் போனை எடுப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரிஷிகாந்தை நாயகனாக வைத்து மொத ராத்திரி  மூலம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ராஜா கருப்பசாமி போன் செய்தால்கூட அவர் எடுப்பதில்லை என அந்தணன் விமர்சித்துள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சமீபத்தில் ரிஷிகாந்த் தனது 15 ஆண்டுகால சினிமா பயணம் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டபோது, அந்தப் பதிவுக்குக் கீழே இயக்குநர் ராஜா கருப்பசாமி,  அதெல்லாம் இருக்கட்டும் ஃபோன் பண்ணா எடுப்பீங்களா மாட்டீங்களா  என நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தார்.  
 
இதுபற்றிப் பேசிய வலைபேச்சு அந்தணன், இதேபோன்று வெற்றி கிடைத்த பிறகு நடந்துகொண்ட நடிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் இருந்ததாகவும், அவர் தற்போது சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆரம்ப காலங்களில் பல ஆண்டுகள் போராடி தற்போது கிடைத்திருக்கும் வெற்றியையும் வாய்ப்புகளையும் ரிஷிகாந்த் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அந்தணன் அறிவுறுத்தியுள்ளார்.

Tags

From Around the web