Modha Rathri Box Office : 15 லட்சத்தை கூட தொடாத மொத ராத்திரி!

 
Modha Rathri

'மொத ராத்திரி' முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் தான் 'மொத ராத்திரி'.

இப்படம் நேற்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி என்பவர் தான் இயக்கியிருக்கிறார்.

இதில் அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பகவதி பெருமாள், ஏ.வெங்கடேஷ், சேத்தன், சுமித்ரா தேவி, அப்துல் லீ, சங்கீதா பாலன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

ரொமான்டிக் காமெடி ஜானர் படமான இது ரசிகர்களிடம் பாஸ் மார்க் வாங்கி விட்டது. ஆனால், முதல் நாள் வசூல் மிக குறைவு தான். உலக அளவில் வெறும் ரூ.14 லட்சம் மட்டுமே கல்லா கட்டியிருக்கு.

From Around the web