மொத ராத்திரி படத்தின் முதலா முடிவா பாடல் வீடியோ!
ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் புது படம் தான் 'மொத ராத்திரி'. ராஜா கருப்பசாமி என்ற அறிமுக இயக்குநர் ஒருவர் தான் இதை இயக்கியிருக்கிறார்.
ரொமான்டிக் காமெடி படமான இதில் கதாநாயகியாக அனிஷ்மா அனில்குமார் நடிக்க, முக்கிய கேரக்டர்களில் பகவதி பெருமாள், ஏ.வெங்கடேஷ், சேத்தன், கார்த்திகேயன், அப்துல் லீ, ஷெல்லி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
தற்போது, பரத் சங்கர் இசையில் 'முதலா முடிவா' என்ற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை சைந்தவியும், அபய் ஜோத்புர்கரும் இணைந்து பாடியுள்ளனர்.
After the banger beats of #DaiDakka, here is the soulful melody from #ModhaRathri ✨
— Mythri Movie Makers (@MythriOfficial) August 18, 2026
Second single #MudhalaMudiva out now 🎼
▶️https://t.co/zucpOziU3X
A @bharathsankar12 musical
In cinemas worldwide on August 21st.
Bookings open soon!#KudumbaPadam#MythriTamil03… pic.twitter.com/68Q1uSKdUw
இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.