மொத ராத்திரி ட்ரெய்லர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

 
Modha Rathri

தமிழில் ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள புது படம் தான் 'மொத ராத்திரி'. இதில் கதாநாயகனாக ரிஷிகாந்த் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ஏ.வெங்கடேஷ், சேத்தன், பகவதி பெருமாள், வர்ஷினி கார்மேகம், சங்கீதா பாலன், சுமித்ரா தேவி ஆகியோர் நடித்துள்ளனர்.

புதுமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார். இதை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தான் தயாரித்திருக்கிறது.

தற்போது, இதன் ட்ரெய்லரை வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

From Around the web