×

முதல்வர் பதவிக்கு ஆபத்து... என்ன செய்ய போகிறார்... உதவுவாரா மோடி!

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதையடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 

 

ஆனால் அவர் அப்போது எம்.எல்.ஏவாகவோ அல்லது எம்.எல்.சியாகவோ இல்லை. எனவே அடுத்த 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏவாகவோ அல்லது எம்.எல்.சியாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டமாகும். 

வரும் மே 27ஆம் தேதியுடன் உத்தவ் தாக்கரேவிற்கான 6 மாத கால அவகாசம் நிறைவு பெறுகிறது.இதையொட்டி கடந்த 24ஆம் தேதி அம்மாநிலத்தில் காலியாகவுள்ள 9 எம்.எல்.சி இடங்களுக்கு தேர்தல் நடத்தி அதன்மூலம் உத்தவ் தாக்கரேவை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்தனர். 

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அனைத்தையும் பாழாக்கிவிட்டது. ஒட்டுமொத்த நாடும் கொரோனாவால் ஸ்தம்பித்து கிடக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News