Categories: Cinema News latest news

O2 படத்தில் நயன்தாரா மகனாக வீடியோ பிரபலம்… படத்தோட ஹைலைட்டே அதுதான்!…

ஹீரோக்களுடன் ஒரு பக்கம் டூயட் பாடி வந்தாலும் ஒரு பக்கம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருபவர் நயன்தாரா. மாயா, இமைக்கா நொடிகள், அறம், ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் ஆகிய படங்களே அதற்கு சாட்சி.

தற்போது அவர் O2 என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஒரு எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தை ஜி.கே.விக்னேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் யுடியூப்பில் வீடியோ வெளியிட்டு பிரபலமான சிறுவன் ரித்விக் நயனின் மகனான நடித்துள்ளது தெரியவந்துள்ளது. செய்தி வாசிப்பது போல் வீடியோ வெளியிட்ட சிறுவன் ரித்விக் ஓவர் நைட்டில் பிரபலமானான். அதைத்தொடர்ந்து பல வீடியோக்கள் மூலம் சிறுவன் பிரபலமானான்.

O2 படத்தில் நயன் மற்றும் ரித்விக்கின் நடிப்பு ஹைலைட்டாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா