கேரள மல்லுவாக இருந்தாலும் தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் ரித்து வர்மா. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தா. இப்படத்தில் துல்கர் சல்மான், நிரஞ்சனி, ரக்ஷன் என பலரும் நடித்திருந்தனர். கவுதம் மேனன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
கவுதம் மேனனுக்கு இவரை பிடித்துப்போக தனது இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ ‘நட்சத்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். இவருக்கும் விக்ரமுக்கான ரொமான்ஸான பாடல் காட்சி கூட யுடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், அப்படம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. அதன்பின் தெலுங்கில் ஹிட் அடித்த நின்னிலா நின்னிலா படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தேனி’படத்தில் நடித்தார்.
எப்படியாவது தமிழில் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் அவர் மற்ற நடிகைகள் போலவே போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
அப்படி அவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…