கருப்பு மெகா ஹிட் கொடுத்தும் யாரும் வரலயே!.. அப்செட்டில் ஆர்.ஜே.பாலாஜி எடுத்த முடிவு...

 
rj balaji


சென்னையில் உள்ள ஒரு தனியார் ரேடியோவில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் பாலாஜி. அதன்பின் சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படம் மூலம் நடிக்க தொடங்கினார். அதன்பின் தொடர்ந்து சில படங்களில் காமெடியனாக நடித்தார்.
மேலும், எல்.கே.ஜி திரைப்படம் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார்..

நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். ஆனால் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக சுந்தர்.சி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான மூக்குத்தி அம்மன்2 பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்திருக்கிறது.

ஒருபக்கம் சூர்யாவை வைத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கி வெளியான கருப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து உலகம் முழுவதும் ரூ.310 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கருப்பு சூப்பர் ஹிட் அடித்தும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்க எந்த பெரிய நடிகர்களும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது.ரஜினி முதல் பலரை அணுகியும் ஒன்னும் நடக்கவில்லையாம். எனவே, மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஆர்.ஜே பாலாஜி.

Murugan ..
Murugan ..

5178 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web