18 அடி அரிவாள்.... கருப்பனுக்கு நேர்த்தி கடன் செலுத்திய ஆர். ஜே பாலாஜி!

 
karuppan


கருப்பன் வெற்றி: 

சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கருப்பன் கடந்த 15ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தான் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை படைத்து வசூல் ரீதியாக பெரும் லாபத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

karuppan

இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசலீட்டி அபார சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில்  திரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, அனிகா உள்ளிட்ட பல நடித்திருந்தார்கள்.

18 அடி அரிவாள்: 

மேலும், இந்த திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் லாபத்தை கொடுத்து மகிழ்ச்சியில் அளித்திருக்கிறது.

இந்நிலையில் கருப்பு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி பதினெட்டாம்பட்டி கருப்பனுக்கு 18 அடி அரிவாள் ஒன்றை சாத்தி பிரார்த்தனை செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட பூஜை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கருப்பன் சாமி உங்களுக்கு நிச்சயம் துணை நிற்பார் இனிமேல் வருகிற படங்களிலும் உங்களோடு கூட இருப்பார். இந்த வெற்றி மாபெரும் வெற்றி கருப்பன் கொடுத்த வெற்றி என அவருக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

Tags

From Around the web