சூர்யாவுக்கு குங்குமம்.. ரஜினிக்கு விபூதி!.. செமயா ஸ்கெட்ச் போடும் ஆர்.ஜே.பாலாஜி!...
ரேடியோவில் தொகுப்பாளராக வேலை செய்த பாலாஜி சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் ஹீரோக்களின் நண்பனாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி நடித்திருந்தார். அதன்பின் எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
அதன்பின் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் ஹீரோவாக நடித்ததோடு அந்த படங்களுக்கு இணை இயக்குனராகவும் இருந்தார். தற்போது சூர்யாவை விட்டு கருப்பு என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ளது. கண்டிப்பாக கருப்பு சூர்யாவுக்கு ஒரு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த புதிய படத்திலிருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகிய நிலையில் அந்த படத்திற்கு புதிய இயக்குனரை தேடும் வேலைகள் நடந்து வருகிறது. அந்த இயக்குனர்கள் பட்டியலில் ஆர்.ஜே பாலாஜி பெயரும் அடிபடுகிறது. அவர் விரைவில் ரஜினி சந்தித்து கதை சொல்வார் என செய்திகள் கசிந்துள்ளது.
அதேநேரம் கருப்பு படம் எப்படி இருக்கிறது? அதன் ரிசல்ட் என்ன? என்பதெல்லாம் பார்த்துவிட்டுதான் இறுதி முடிவை எடுப்பார்கள் என்கிறார்கள். இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி ரஜினிக்கு சொல்லப்போகும் கதை அவர் ஏற்கனவே விஜய்க்கு சொன்ன கதை என்கிறார்கள்.
அந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. எனவே அந்த கதையை ரஜினிக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றி ரஜினியிடம் சொல்லப் போகிறாராம் ஆர்.ஜே.பாலாஜி. பொதுவாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு என்றால் அவருக்காக ஒரு தனி கதையைத்தான் இயக்குனர்கள் உருவாக்குவார்கள் ஆனால் ஏற்கனவே உருவாக்கிய கதையை ஆர்.ஜே.பாலாஜி சொல்லப் போகிறாராம். இதையடுத்து கருப்பு படத்தில் சூர்யாவின் நெற்றியில் குங்குமம் வைத்த ஆர்.ஜே.பாலஜி விஜய்க்கு சொன்ன கதையை ரஜினியிடம் சொல்லி அவருக்கே விபூதி அடிக்கப் போகிறார் என்றெல்லாம் நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
