மதுரையில் சூர்யா ரசிகர்களுக்கு தடபுடலான விருந்து!.. ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

 
மதுரையில் சூர்யா ரசிகர்களுக்கு தடபுடலான விருந்து!.. ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அஞ்சான் படத்துக்கு அஞ்சு டிக்கெட் இருக்கு வறியா என நானும் ரவுடி தான் படத்தில் ஆர்ஜே பாலாஜி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவை பங்கமாக கலாய்த்திருப்பார். அதன் பின்னர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கவும் சூர்யா வாய்ப்புக் கொடுத்து தனது பெரிய மனுஷத்தன்மையை நிலைநாட்டியிருப்பார்.

மதுரையில் சூர்யா ரசிகர்களுக்கு தடபுடலான விருந்து!.. ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

அதுமட்டுமின்றி ஆர்ஜே பாலாஜி வேண்டாம் என விஜய் தனது கடைசி படத்தை எச். வினோத்துக்கு கொடுத்த நிலையில், சூர்யா தோள் கொடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க முன் வந்தார்.

ஆனால், படம் பல தடைகள் காரணமாக கால தாமதம் ஆகிவிட்ட நிலையில், சூர்யா ரசிகர்களே படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்த நிலையில், கண்டிப்பாக இந்த படம் அன்பான ஃபேன்ஸுக்கு கறி விருந்தாக இருக்கும் என சொன்ன ஆர்ஜே பாலாஜி வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 26ம் தேதி மதுரையில் உள்ள சோலமலை பாலிடெக்னிக் கல்லூரியில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்து அதன் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

சாய் அபயங்கர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது லைவ் பெர்ஃபார்மன்ஸ் இருக்கும் என்றும் அறிவித்துள்ளனர். மெளனம் பேசியதே, ஆறு படங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா இந்த படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் பங்கேற்க போகின்றனர்.

From Around the web