கருப்பு பிளாக்பஸ்டர்!.. முதலமைச்சர் விஜய்யை சந்தித்த ஆர்ஜே பாலாஜி!.. ஹீரோயினை தேடும் ஃபேன்ஸ்!..

 
rj balaji

நயன்தாராவை  வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என படம் ஒன்றை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட கதை. விஜய்க்காக கருப்பு கதையாக மாறியது. ஆனால், விஜய் சொன்ன நேரத்துக்குள் ஆர்ஜே பாலாஜியால் படத்தை முடிக்க முடியாது என சொன்ன நிலையில், ஜன நாயகன் பக்கம் சென்றுவிட்டார்.

சூர்யாவை வைத்து ஆர்ஜே பாலாஜி கருப்பு படத்தை எடுத்து பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியையும் முதல் முறை 1 கோடி ஃபூட் ஃபால்ஸ், 340 கோடி வசூலையும் பரிசாக வழங்கினார்.

karuppu

இது எல்லாத்துக்கும் காரணமே முதலமைச்சர் விஜய் தான் என தற்போது ஆர்ஜே பாலாஜி தனது மனைவியுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யை நேரில் சென்று பார்த்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கருப்பு படத்தின் ஹீரோயின் த்ரிஷாவை உடன் அழைத்துச் செல்லவில்லையா என கிண்டல் செய்து வருகின்றனர்.

சமீபத்தில், அஜித் குமாரின் தாயார் மறைவின் போதும் த்ரிஷா முதல்வர் விஜய்யுடன் வந்த நிலையில், அதிகளவில் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில், கருப்பு படத்தின் ஹீரோயினான த்ரிஷாவையும் கூட கூட்டிட்டு போகாமல் இருந்ததற்கு நன்றி என்றும் எங்கே கருப்பு ஹீரோயின் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

vijay

கருப்பு படத்தைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி அடுத்து யாரை வைத்து என்ன படத்தை இயக்கப் போகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. அய்யனார், மாசாணி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களை வைத்து மூக்குத்தி அம்மன், கருப்பு பாணியிலேயே படம் எடுத்தாலே கல்லா கட்டலாம் என்று கூறுகின்றனர்.

Tags

From Around the web