ரஜினி பட வாய்ப்பு!.. சுந்தர்.சி-யை பழி வாங்கும் ஆர்.ஜே.பாலாஜி!.. எல்லாமே ஒரு கணக்குதான்!...
Thalaivar 173: சினிமா உலகம் போட்டி பொறாமைகளை கொண்டது. ஒருவரின் வளர்ச்சியை பலரும் ரசிக்க மாட்டார்கள். ஒருவர் வெற்றி பெற்றால் பலரும் சந்தோஷப்பட மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒருவரின் வெற்றி பலரின் சந்தோஷத்தையும் கெடுக்கும். அப்படிப்பட்ட மோசமானவர்கள் நிறைந்ததுதான் சினிமா உலகம்.
அதையெல்லாம் தாண்டித்தான் வெற்றிகளை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். ஒருவருக்கு செல்ல வேண்டிய வாய்ப்பை இன்னொருவர் சுலபமாக தட்டி பறித்துவிடுவார் அல்லது தடுத்து விடுவார். இது சினிமாவில் அதிகம் நடக்கும். அதற்கு காரணம் சினிமாவில் வெற்றி பெற்றால் கிடைக்கும் அதிக சம்பளம், பணம், பேர், புகழ் எல்லாம்தான். எனவே அதை சுலபமாக ஒருவருக்கு கிடைத்து விட சினிமா உலகில் பலரும் அனுமதிக்க மாட்டார்கள் அல்லது விரும்ப மாட்டார்கள்.
உள்ளுக்குள் பொறாமையும், காழ்புணர்ச்சியும் இருந்தாலும் நேரில் சந்திக்கும் போது கட்டியணைத்து முகம் சிரித்தபடி அன்பை பரிமாறுவார்கள். சினிமா விழாக்களில் பேசும்போது நல்லவர்கள் போல பேசுவார்கள். ஆனால் உள்ளுக்குள் அவ்வளவு வஞ்சம் இருக்கும். அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். இதை சினிமாவில் பல வருடங்கள் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சினிமாவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் சென்னையில் உள்ள ஒரு FM ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார். அவர் சரளமாக பேசுவதை கேட்டு இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் அவரைக் கூப்பிட்டு சில காட்சிகளில் நடிக்க வைத்தார். சில மணி நேரம் ஷூட்டிங், நேரத்திற்கு ஜூஸ், சாப்பாடு, ஏசி கார், 5 மாதங்கள் வேலை பார்த்து வாங்கும் சம்பளத்தை 10 நாட்களில் கிடைத்ததால் பூரித்துப் போன பாலாஜி இனிமே சினிமாதான் என முடிவெடுத்தார். இதை அவரே பல பேட்டிகளிலும் சொல்லியிருக்கிறார். சில படங்களில் காமெடியனாக நடித்துவிட்டு எல்.கே.ஜி, வீட்ல விசேஷங்க, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் கடைசி இரண்டு படங்களிலும் அவர் இரண்டு இயக்குனர்களில் ஒருவராக இருந்தார்.
தற்போது சூர்யாவை வைத்து கருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கமளவுக்கு முன்னேறியிருக்கிறார். இதையெல்லாம் விட பெரிதாக ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய நிலையில் அந்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் ஆர்.ஜே.பாலாஜியின் பெயரும் இருக்கிறது. விரைவில் அவர் ரஜினியை சந்தித்து கதை சொல்லப்போகிறார் என செய்திகள் கசிந்துள்ளது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 உருவானபோது அந்த படத்தின் கதையை எழுதி இயக்கவிருந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால் ஐசரி கணேசனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த படத்திலிருந்து ஆர்.ஜே.பாலாஜி விலக சுந்தர்.சி யை அழைத்து அந்த படத்தை இயக்கச் சொன்னார் ஐசரி கணேஷ். அந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது.
மூக்குத்தி அம்மன் 2-வில் பெண் கதாபாத்திரத்தை தெய்வமாக வடிவமைத்திருந்த பாலாஜி அதை ஆண் தெய்வமாக மாற்றி, கதையையும் கொஞ்சம் மாற்றி ‘கருப்பு’ என்கிற பெயரில் சூர்யாவை வைத்து எடுக்க துவங்கினார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் முடியவிருக்கிறது. மூக்குத்தி அம்மன்2, கருப்பு ஆகிய படங்களின் ஒரு வரிக்கதை ஒன்றுதான்.
தனது வாய்ப்பு சுந்தர்.சி-க்கு போனதால் ஆர்.ஜே.பாலாஜிக்கு கோபம் இருந்திருக்கும். அதனால்தான் அவர் வெளியேறிய ரஜினி படத்தில் தான் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டு ரஜினிக்கு கதை சொல்ல காத்திருக்கிறார். இதன் மூலம் அவர் சுந்தர்.சியை வஞ்சம் தீர்ப்பார் என்றெல்லாம் நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
