#image_title
கடந்த இரண்டு தினங்களாக நயன் மற்றும் தனுஷ் பிரச்சினைதான் பெரிய விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்று நயன்தாராவின் தி டாக்குமெண்ட்ரி ஆஃப் ஃபேரிடேல் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளையும் பாடலையும் பயன்படுத்தக் கூடாது என தனுஷ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
10 கோடி நஷ்ட ஈடு: இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ரிலீஸானது. அந்த டிரெய்லரில் 3 வினாடி மட்டும் நானும் ரவுடிதான் படத்தின் காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதனை எதிர்த்து தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இது நயன்தாராவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் அந்த கோவத்தில் தனுஷ் பற்றியும் அவரின் இந்த செயலை குறிப்பிட்டும் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் பாலாஜியை சட்டையை பிடித்து அடித்த பெண் ஆட்டோ டிரைவர்… இந்த கேரக்டருக்கு தேவைதான்!..
அவர் அறிக்கை வெளியிட்டதில் இருந்து சமூக வலைதளம் முழுவதும் இதையேதான் பேசி வந்தனர். ஆனால் இது நாள் வரை தனுஷ் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இன்று வெளியான ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இதற்கு தனுஷின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்றும் எதிர்ப்பாக்கப்படுகிறது.
balaji
கூத்தாடி ரெண்டு பட்டால்: இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி இந்த பிரச்சினையை பற்றி பேசியிருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் படமுழுக்க டிராவல் செய்திருப்பார் ஆர்ஜே பாலாஜி. அவரிடம் தனுஷ் மற்றும் நயன் பிரச்சினையை பற்றி எப்படி பார்க்கிறீர்கள் என கேட்ட போது ‘இதை பற்றி நேற்றுதான் நானே ஆன்லைனில் பார்த்தேன். பேய்க்கும் பேய்க்கும் சண்ட அப்படின்னா ஊரே வேடிக்கை பார்க்கும்’
இதையும் படிங்க: Jyothika: பொண்டாட்டினு சொல்லி என்ன பேசியிருக்கு இந்த பொம்பள? ஜோதிகாவை வெளுத்து வாங்கிய பிரபலம்
அதாவது கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம்னு மாறிப்போச்சு. ஆனால் இதில் எனக்கு கருத்து சொல்ல என்ன இருக்குனு தெரியவில்லை. ஏன் தனுஷே இதுக்கு பதில் சொல்லல. இதுல நான் எப்படி சொல்லமுடியும். அவங்களுக்குள்ள அவங்க பேசிப்பாங்க.ரெண்டு பேருமே பெரிய பிரபலங்கள். அதனால் லீகலா டீல் பண்ணிக்கலாம். அல்லது இந்த மாதிரி சோசியல் மீடியாவில் டீல் பண்ணிக்கலாம். ஆனால் ஆடியன்ஸுக்கு இது ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது என ஆர்ஜே பாலாஜி கூறினார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…