×

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொம்பு தூக்கும் நயன்தாரா பட நடிகர்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் படங்களை நடித்து வரும் நடிகரும் இயக்குனரும் தான் ஆர் ஜே பாலாஜி. இவர் தற்போது நயன்தாரா நடிப்பில் தீபாவளியன்று வெளியாகவிருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

 

இந்த படமானது நவம்பர் 14ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்  வெளியாகவுள்ளது.  இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி தற்போது  ட்விட்டரில் லைவ்வில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். 

அப்பொழுதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஏனென்றால் ரஜினி ஒரு நல்ல மனிதன் என்று சிறுவயதில் எனது தாத்தா கூறியது இன்றுவரை எனது ஆள் மனதில் பதிந்துள்ளது. 

மேலும் சில வருடங்களுக்கு முன்பு நான் ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி ஒரு பேட்டியின் மூலம் விமர்சித்தேன். ஆனால் அதன்பின்னர் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு. 

நான் அப்படி பேசியிருக்க கூடாது என அடிக்கடி மனதில் தோன்றும், அதற்காக இன்று வரை நான் மனம் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News