ஓடிடியில் வரவேற்பில்லாத கருப்பு.. எனக்கு முன்பே தெரியும்- ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கருப்பு. ஆ.ஜே.பாலாஜி இயக்கிய அந்த படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்
 
karuppu movie

சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கருப்பு. ஆ.ஜே.பாலாஜி இயக்கிய அந்த படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவந்த சூர்யாவின் மார்கெட்டை இந்த ஒரே படம் உச்சத்திற்கு கொண்டு சென்றது. குறிப்பாக சூர்யாவின் சினிமா கேரியரில் உச்ச வசூல் பெற்ற படம் கருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்படம் உலகளவில்  ரூ 340 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கருப்பு கடந்த 12ம் தேதி ஓடிடியில் வெளியானது.  அங்கும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கருப்பு படத்தை யாரும் சீண்டவேயில்லை. பலரும் ட்ரோல் செய்ய துவங்கினர். சொல்லபோனால் கருப்பு படத்திற்கு ஓடிடியில் சுத்தமாக வரவேற்பு இல்லை.

இந்த நிலையில் கருப்பு ஓடிடி முடிவு குறித்து அப்பட இயக்குனர் ஆர்.,ஜே.பாலாஜி கூறுகையில், 

karuppu movie

கிராபிக்ஸ் பணிகளுக்கு 8-10 மாதங்கள் தேவைப்படும் நிலையில் நிதி மற்றும் காலக்கெடு சிக்கல்களால் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கருப்பு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கதைக்கு முக்கியமானவை என்பதால் அவற்றை நீக்கவும் முடியவில்லை.  தியேட்டரில் ரசிகர்கள் கூட்டமாக பார்க்கும்போது குறைகள் தெரியாது. ஓடிடியில் உற்று நோக்குவதால்  அவை வெளிபட்டது. ரசிகர்கள் தவறை சுட்டிக்காட்டி விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை. ரசிகர்கள் பகிர்ந்ததைவிட அதிகமான கிராபிக்ஸ் தவறுகள் எனக்கு முன்பே தெரியும்.  ஒடிடி ரசிகர்களுக்கு சிறந்த   அனுபவம் தர முடியாததற்கு வருத்தப்படுகிறேன். அடுத்த முறை இன்னும் சிறந்த படத்தை வழங்குவோம் என்று கூறியுள்ளார்.
 

From Around the web