ரேடியோ ஜாக்க்கியாக இருந்து இன்று ஒரு திரைப்பட நடிகராக பிரபலமாகியுள்ளார் ஆர்.ஜே.பாலஜி. சினிமாவில் எதிர்நீச்சல், தீயா வேலை செய்யனும் குமாரு, வாயை மூடி பேசவும், வடகறி, ஜில் ஜங் ஜக், காற்று வெளியிடை, ஸ்பைடர், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அந்த படத்தில் நயன்தாராவுடன் நல்ல நட்பு ஏற்பட்டதால் அவரை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
சமீபத்தில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்கிறார். இந்த படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்கிறார். ‘வீட்ல வீஷேசம்’ என்ற தலைப்பை உடைய இப்படத்தின் முதல் இரண்டு சிங்கிள்களும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறி வரும் பாலாஜி விக்ரம் படத்தில் நடித்த விஜய் சேதுபதியை கலாய்த்து பேசியுள்ளார். ரசிகர் ஒருவர் நீங்கள் கொஞ்சம் மெதுவாக பேசினால் எல்லாருக்கும் புரியும் என்று கூற அதற்கு அவர் சில சமயம் நான் பேசுறது எனக்கே புரியாது. விக்ரம் படத்துல விஜய் சேதுபதி பேசுறது புரியாம இருக்குற மாதிரி நான் பேசுறதும் புரியாது என்று கூறினார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…