Connect with us
vijay mirchi

Cinema News

இப்படி ஒரு வாழ்க்கை லட்சியமா.. அட கடவுளே.. அதிக பணம் சம்பாதிக்க ஆர்.ஜே.விஜயின் வினோத ஐடியா..

ஆர்.ஜே.விஜய் ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கி, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி, தற்போது படங்களில் துணை நடிகராக நடித்துவருகிறார். மேலும் இவர் மேயாத மான் படத்தில் வரும் நீ மட்டும் போதும், மிஸ்டர் லோக்கல் படத்தில் வரும் டக்குனு டக்குனு போன்ற சில பாடல்களையும் எழுதியுள்ளார்.

டான், எல்ஜிஎம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஆர்.ஜே.விஜய், அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என் வாழ்க்கை லட்சியம் லாரி டிரைவர் ஆவது தான் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- தலைவரு நிரந்தரம்!.. நிரூபித்த ரஜினி!.. ஜெயிலர் 3 நாள் மொத்த வசூல் இத்தனை கோடியா?!…

அதற்காக நான் லைசன்ஸ் கூட வாங்கிவிட்டேன். கல்லூரியில் ஒருமுறை இது குறித்து என் ஆசிரியரிடம் கூறிவிட்டேன். எல்லாரும் ஐடி கம்பெனியில் சேர வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் நான் மட்டும் லாரி டிரைவராக வேண்டும் என்று கூறினேன்.

இதனால் அவர் கடுப்பாகி என் பெற்றோரிடம் மாட்டிவிட்டுவிட்டார். எனக்கு பெரிதாக படிப்பில் ஆர்வம் இல்லை. பொறியியல் கல்லூரியில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள், அரியர்ஸ் எல்லாம் வைத்து, கஷ்டப்பட்டு தான் முடித்தேன்.

படிப்பில் ஆர்வம் இல்லாததால், லாரி டிரைவர் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். லாரி டிரைவரானால் அதிக பணம் சம்பாதிக்கலாம். நிறைய லாரிகளை வாங்கி பெரிய பணக்காரன் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

என் தந்தை கூட லாரி வைத்திருந்தார். அதனால் தான் அந்த ஐடியா வந்தது. என் நண்பர்கள் சிலர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார்கள். நான் மட்டும் மீடியோவிற்கு வரவில்லை என்றால், லாரி டிரவைராக தான் ஆகியிருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும் என்று ஆர்.ஜே.விஜய் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- முதல்முறையாக விஜயுடன் இணையும் கமல்?!.. லியோ படத்தில் லோகேஷ் வைத்திருக்கும் தரமான சஸ்பென்ஸ்..

author avatar
prabhanjani
Continue Reading

More in Cinema News

To Top