
Cinema News
மன்சூர் அலிகான் பாவம்!.. ரொம்ப நல்லவன்!… ஆர்.கே செல்வமணி ஃபீலிங்….
Mansoor Alikhan: சினிமாவில் நடனக் கலைஞராக தனது கெரியரை துவங்கியவர் மன்சூர் அலிகான். பல படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடனமாடி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லன் நடிகராக மாற்றினார் விஜயகாந்த். ஆர்கே செல்வமணி இயக்கிய இந்த படத்தில் மன்சூர் அலிகான் மெயின் வில்லனாக நடித்திருந்தார் என சொல்வதை விட கலக்கியிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மன்சூர் அலிகான். அவர் வசனம் பேசும் ஸ்டைலும் அவர்களின் உடல் மொழியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
சமீபத்தில் கூட கேப்டன் பிரபாகரன் படம் ரீரிலிஸ் செய்யப்பட்டபோது தியேட்டரில் பேசிய மன்சூர் அலிகான் ‘நான் அந்த படத்தில் எதுவும் செய்யவில்லை. எல்லாம் ஆர்கே செல்வமணி எனக்கு சொல்லிக் கொடுத்தது.. எனக்கு அவர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதைத்தான் செய்தேன்.. அவருக்கு மிகவும் நன்றி’ என பேசி இருந்தார்.

கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு பின் பல படங்களிலும் தொடர்ந்து வில்லனாக நடித்தார். கடந்த சில வருடங்களாகவே காமெடி கலந்த வில்லனாக கலக்கி வருகிறார் மன்சூரலிகான். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர்.கே செல்வமணி ‘மன்சூர் அங்க தொட்டான்.. இங்க தொட்டான் அப்படின்னு பிரச்சனை வரும்.. ஆனால் பாவம் அவன் அப்படி கிடையாது..
அவனுக்கு எந்த கேரக்டர் கொடுக்கிறோமோ அதுவாகவே அவன் மாறிடுவான்.. அதனால கூட நடிக்கிற நடிகைகள் கூட பிரச்சினை வரும்.. ஆனால் நன்றி மறக்காதவன்.. ரொம்ப நல்லவன்.. என்னை பொறுத்த வரைக்கும் மன்சூர் மிகச்சிறந்த நடிகன்’ என பாராட்டி பேசி இருக்கிறார்.