
Cinema News
விஜயகாந்த் – ராவுத்தர் கிட்ட இருக்கிற அந்த விஷயம் உலகத்திலேயே சிறந்தது.. வியந்த ஆர்கே செல்வமணி
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஆர்கே செல்வமணி. திரைப்படக் கல்லூரியில் பயின்ற பின்பு பிரபல இயக்குனர் நடிகருமான மணிவண்ணனின் உதவியாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் தனது முதல் திரைப்படத்தை விஜயகாந்தை வைத்து 1990 ஆம் ஆண்டு
”புலன் விசாரணை” என்ற படத்தை இயக்கினார். சில அரசியல் பெரியவர்களின் தூண்டுதலின் பேரில் பல பெண்களை கடத்திக் கொன்ற ஆட்டோ சங்கரின் நிஜ வாழ்க்கை வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு விஜயகாந்தை வைத்து அவரது நூறாவது படமான ”கேப்டன் பிரபாகரன்” படத்தை எடுத்தார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பின்னர் விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் ஆனார். இந்த படம் விஜயகாந்துக்கும் ஆர் கே செல்வமணிக்கும் தமிழ் சினிமாவில் ஒரு திறப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இது சினிமா வட்டாரங்களில் எல்லோரும் அறிந்ததே. கேப்டன் பிரபாகரன் படபிடிப்பு தளத்தில் விஜயகாந்த் மற்றும் ராவுத்தரின் நட்பு எப்படிப்பட்டது என்று மனதை விட்டு பகிர்ந்திருக்கிறார் இயக்குனர் ஆர்கே செல்வமணி மேலும் அவர் கூறுகையில் ”கேப்டன் பிரபாகரன் படபிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும் அதை எல்லாவற்றையும் விஜயகாந்த் சார் பார்த்துக்கொள்வார். மேலும் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடியாது, உடனே இப்ராஹிம் சார் சூட்டிங் கேன்சல் செய்து விடுவார் ஆனால் விஜயகாந்த் சார் அவரை சமாதானப்படுத்தி சூட்டிங் நடத்த உதவுவார்”.
”இரண்டு பேர் கிட்டயும் பயங்கரமான சண்டைகள் வரும். இருந்தாலும் நான் பல ஆயிரம் பேரை பார்த்திருக்கிறேன் ஆனால் விஜயகாந்த், ராவுத்தர் நட்பு மாதிரி நான் பார்த்ததே இல்லை. கணவன் மனைவியை விட அந்த நட்பு புனிதமானது. அதே சமயம் ஸ்கூல் பசங்களை விட குழந்தை தனமானது. உலகத்தில் இருக்கிற மிகச்சிறந்த நட்புகளில் விஜயகாந்த் ராவுத்தர் நட்பு ஒன்று” என்று கூறியுள்ளார்.