vijay
RK Selvamani: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 430 கோடி வரை வசூல் செய்து விஜய்தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்திருக்கிறார். லோகேஷ் – விஜய் கூட்டணி என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கத்தான் செய்யும்.
அவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியாகி தாறு மாறு ஹிட் அடித்தது. மீண்டும் லியோ படத்தின் மூலம் இணைந்து மறுபடியும் அவர்கள் வெற்றிக் கூட்டணியை நிரூபித்திருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னை உள்விளையாட்டரங்கில் நடந்தது.
இதையும் படிங்க: சிவாஜியை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆரை மட்டும் இயக்கலையாம்.. ஏன் தெரியுமா..?
விழாவிற்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சுவாரஸ்யமான பல சம்பவங்களும் விழாவில் நடந்தது. விஜயின் அந்த குட்டி ஸ்டோரியை கேட்க விஜய் ரசிகர்கள் உட்பட அவரது மக்கள் இயக்கம் சார்பாக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
சூப்பர் ஸ்டார் சர்ச்சையில் இருந்து விஜயை பற்றி சுற்றி வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒட்டுமொத்தமாக நேற்று விஜய் பேசிய அந்த பேச்சு இருந்தது என்றே சொல்லலாம்.மிஷ்கினும் விஜயை பற்றி தெகட்ட தெகட்ட பேசி விஜயை உருக வைத்தார்.
இதையும் படிங்க: நம்பியாரை பார்த்து சிரித்த சிவாஜி.. ரூமுக்கு போயிட்டு வந்து முறைத்தாராம்.. இது என்ன கதையா இருக்கு..!
இந்த நிலையில் விழாவிற்கு பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணியும் கலந்து கொண்டார். விழா முடிந்து வெளியே வந்த செல்வமணியிடம் நிரூபர் ஒருவர் விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு வந்திருக்க்கிறீர்கள். அஜித்துக்கு என்ன சொல்றீங்க? என்று கேட்டார்.
அதற்கு செல்வமணி ‘என்ன? விஜய் படம் வெற்றிப் பெற்றது . வாழ்த்து சொல்ல வந்தேன். அதே போல் அஜித் படமும் வெற்றியடையட்டும். வாழ்த்து சொல்வோம்’ என்று சொல்லிவிட்டு சென்றார்.
இதையும் படிங்க: சக்சஸ் மீட்க்கு பதில் இப்படி பேரு வைங்க… ஒரு வார்த்தைல ஒட்டுமொத்த மீட்டையும் கலாய்த்த பயில்வான்…
ஆதிக் ரவிச்சந்திரன்…
Goundamani: கோவையை…
TVK Vijay:…
AK64: ஆதிக்…
Karuppu Movie:…