×

பில்லா பாண்டி திரைப்படத்தின் எழுத்தாளர் எம்.எம்.எஸ் மூர்த்தி திடீர் மரணம்

தமிழ் திரைத்துறையில் அடுத்தடுத்து பிரபலங்கள் மரணம் அடைந்து வரும் செய்தி மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 
Billa-Pandi-writer-MMS-Murthy-696x464

தமிழ் திரைத்துறையில் அடுத்தடுத்து பிரபலங்கள் மரணம் அடைந்து வரும் செய்தி மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உருவான கொரோனா இரண்டாவது அலை பாதிக்கப்பட்டு தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பலரும் கொரோனாவாலும் வேறு சில  காரணங்களாலும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். 

அதிர்ச்சி!!! ஆண்டி இந்தியன் பட கலைஞர் திடீர் மரணம்! ப்ளூ சட்டை மாறன் இரங்கல்!இந்த நிலையில் திரை பிரபலங்கள் பலரும், அவர்களின் நெருக்கமான உறவினர்களும் பிற கலைஞர்களும் உயிரிழந்து வரும் சம்பவங்களை செய்தியாக அனைவரும் காண நேரிடுகிறது.

அண்மையில் ப்ளூ சட்டை மாறனின் anti-indian திரைப்படத்தில் பணியாற்றிய சவுண்ட் இன்ஜினியர் காலமானார். இதேபோல் பாடகர்கள், நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், சின்னத்திரை கலைஞர்கள் என பலரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் சில இயக்குநர்களின் மரணம் இன்னும் திரைத்துறையை மீளா துயரில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடித்து வெளிவந்த பில்லா பாண்டி திரைப்படத்தின் எழுத்தாளர் எம்.எம்.எஸ் மூர்த்தி தற்போது உயிரிழந்திருக்கிறார்.

இதுகுறித்து தம்முடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கும், ஆர்.கே.சுரேஷ், “மிஸ் யூ மாமா! ஆன்ம நலம் பெறுங்கள்!” என்று பதிவிட்டிருக்கிறார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News