×

ரோடு ரோலர் மட்டுமில்ல.. இன்னும் கைதொழில் பல இருக்கு பாஸ்! கெத்து காட்டிய தோனி

இந்தியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் மைதானத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காணொலி ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
 

கிரிக்கெட் மைதானத்தில் பிட்ச்சை சரி செய்வதற்காக பயன்படுத்தப்படும் ரோடு ரோலர் வாகனத்தை தோனி இயக்கி பார்க்கும் வீடியோ சமூகவலைதளத்தில் டிரென்டிங்காகி வருகிறது. 

மைதானத்தின் பிட்சை சமம் செய்வதற்கு ரோடு ரோலர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கும், கிரிக்கெட் மைதானத்தில் பயன்படுத்தப்படும் வாகனத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

சாதாரண ரோடுரோலரை விட, இந்த வாகனங்கள் கனம் சற்று குறைந்திருக்கும். யாரு வேண்டுமானாலும் இந்த வாகனத்தை இயக்க முடியும் என்பது இதிலுள்ள விசேஷம். தற்போது இதுபோன்ற ரோடுரோலரை தோனி இயக்கியுள்ளார். இதனை பார்த்த பணியாளர்கள் ஆச்சரியத்தில் ஆடி போய்விட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News