ரோபோ சங்கர் உயிரோடு இருந்தால் இப்படி நடந்திருக்குமா?.. கண்ணன் ரவி திருமணத்தில் நடந்த அவமானம்?..
தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் மூலம் கவனம் பெற்ற ரோபோ சங்கர், தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி உயிரிழந்தார்.
இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்குப் பிறகு மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜா ஆகியோர் மெல்ல மெல்ல அந்த இழப்பிலிருந்து மீண்டு வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி வீட்டு திருமண நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு மரியாதை குறைவாக நடத்தியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
மதியதோர் வாசல் மிதிக்காதே Robo Shankar Family has been insulted in the recent Kannan Family Wedding https://t.co/rLrMNK85S4
— Deepak Kaliamurthy (@Dheeptweet) November 1, 2026
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், ரோபோ சங்கர் குடும்பத்தினரிடம் இப்படி நடந்துகொண்டிருக்கக் கூடாது என சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரோபோ சங்கர் உயிரோடு இருக்கும் போது தனது மகள் இந்திரஜாவுக்கு திரையுலகமே வியக்கும் அளவுக்கு தடபுடலாக திருமணம் செய்து வைத்தார். ஆனால், அவர் உயிரோடு இன்று இல்லாதது தான் அவரது குடும்பத்தினரை யாரும் மதிக்காமல் போக காரணம் என்கின்றனர். திருமண விழா கூட்டத்தில் வந்திருக்கும் பலரும் விஐபிக்கள் என்பதால், அவசரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்பாராமல் நடப்பது இயல்பு தான் என்றும் அந்த குடும்பத்தை மதித்து அழைத்துள்ளனர் என்பதை மறக்கக் கூடாது என்றும் கூறுகின்றனர்.
