×

கொரொனாவால் பாதிக்கப்பட்ட ராக்.. குடும்பத்தினரும் பாதிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி...

நடிகர் ராக் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 

www மல்யுத்த வீரர்களில் பிரபலமானவர் டுவைன் ஜான்சன். அதன் பின் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க துவங்கி தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இவரின் மனைவி மற்றும் மகள்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், தற்போது சிகிச்சையின் மூலம் குணமடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.  அதில், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள், உடல் நலத்தை கவனியுங்கள், முகக்கவசம் அணியுங்கள்,  உங்கள் குடும்பத்தை பாதுகாத்திடுங்கள், உங்கள் வீட்டில் பலரும் கூடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என அவர் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News