அந்தரத்தில் அனிருத்!.. அடேங்கப்பா என்னாம்மா ஃபீல் பண்ணி பாடுறாரு!.. களைகட்டிய கச்சேரி!..
தமிழ் திரைப்பட இசையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் தான் நம்ம ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன். இளம் வயதிலேயே தனது இசைத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இன்று வரை தனது தனித்துவமான இசை ஸ்டைலின் மூலம் அவர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த அனிருத் சமீப காலமாக அவர் இசையமைக்கும் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாமல் பல்பு வாங்கி வருகின்றன. இந்தியன் 2, தேவரா சமீபத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வரை ஏகப்பட்ட படங்கள் சொதப்பினாலும், அந்த படங்களில் கூட அனிருத்தின் இசை தனித்தே நிற்கிறது. சினிமா பட்ங்களை விட இசை கச்சேரிகள் மூலம் ஏகபோகமாக சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் நடத்திய கச்சேரியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது இசைப் பயணம் 2012ஆம் ஆண்டு தனுஷ் நடித்ஹ்ட 3 திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. அந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலகளவில் வைரலாகி, அனிருத்தை ஒரே இரவில் பிரபலமாக்கியது. இந்த பாடல் தமிழ் இசையை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்திய முக்கியமான படைப்பாகவும் கருதப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, மாஸ்டர், ஜெயிலர், விக்ரம் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை தொடர்ந்து நிரூபித்துள்ளார். இளம் தலைமுறையினரின் மனதில் ஆழமாக பதிந்துள்ள அவரது இசை, புதுமையான ஸ்டைலும் மனதை கவரும் பீட்ஸ்களும் கொண்டதாக அமைகிறது.
மேலும், ரஜினிகாந்த், தனுஷ், விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தது அவரது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. அனிருத் பல விருதுகளையும் பெற்றதுடன், அவரது கச்சேரிகள் மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்த ரசிகர் வட்டாரம் அவரை இந்திய இசை உலகின் முக்கியமான முகங்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், அனிருத் சமீபத்தில் பாரிஸ் நகரில் நடத்திய கச்சேரியில் அந்தரத்தில் பறந்துக்கொண்டே பாடிய சாகசத்தை புகைப்படங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இசையில் புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் அனிருத் தமிழ் சினிமாவின் எதிர்கால இசையை வடிவமைக்கும் திறமையான கலைஞராக தொடர்ந்து திகழ்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அனிருத்துக்குப் போட்டியாக தற்போது சாய் அபயங்கர் வந்துள்ள நிலையில், டியூட், கருப்பு, அல்லு அர்ஜுனின் ராக்கா படம் வரை சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இருவருக்கும் இடையே தான் இப்போதைக்கு போட்டியே என்கின்றனர்.
