பொதுவாக ஒரு புதுமுக இயக்குனர் என்றால் முதல் படம் போராடி எடுக்க வேண்டும். அது எவ்வளவு சின்ன ஹீரோவாக இருந்தாலும், கஞ்சத்தனமான தயாரிப்பாளராக இருந்தாலும் படத்தை எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் அப்படி ஹிட் கொடுத்தால் அடுத்த படத்தை போராடாமல் எப்படியாவது கைப்பற்றி விடலாம்.
ஆனால் இதெல்லம் இல்லாமல் முதல் பாடம் முடிந்து வருடங்கள் ஆகி, அது ரிலீஸ் ஆவதற்குள் இரண்டாவது படத்தையும் முடித்து, அதில் எதிர்பார்க்காத கூட்டணியை வைத்து படமெடுத்து, அதும் ரிலீஸ் ஆகாமல் இருக்க அதற்குள் முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றால் அது அருண் மாதேஸ்வரனுக்கு மட்டுமே நடக்கும்.
இதையும் படியுங்களேன் – ஷூட்டிங் தான் போறீங்களா? ஊரசுத்தி பாக்க போறீங்களா.?! நெல்சன் என்ன செய்துள்ளார் தெரியுமா.?!
முதல் பாடம் ராக்கி, திரையரங்கில் பெரிய கலெக்சன் இல்லை என்றாலும் பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். அதற்கடுத்து,இயக்குனர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைத்து சாணி காயிதம் எனும் படத்தை எடுத்து முடித்துவிட்டார். அது இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வ OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.
அதற்குள் தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் அது அந்த காலத்து டான் கதையாம். இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ராக்கி படத்தை வாங்கி வெளியிட்டது , நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம்.
அந்த நிறுவனம் இன்னும் ராக்கி படத்தின் OTT ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருக்கின்றனர். அது எப்போ ரிலீஸ் ஆகும் என தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அது எப்போ தான் நயன்தாரா கையில் இருந்து வெளிவருமோ தெரியலையே.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…