ரோஜா மகளே ராஜகுமாரி!.. வெளிநாட்டில் பட்டம் வாங்கிய அன்ஷு.. அம்மாவுக்கு செம ஹேப்பி!..

ரோஜா மகளே ராஜகுமாரி!.. வெளிநாட்டில் பட்டம் வாங்கிய அன்ஷு.. அம்மாவுக்கு செம ஹேப்பி!..

நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி தனது மகள் அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் டிஸ்டிங்ஷன் வாங்கி பட்டம் பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரோஜா செல்வமணி, பட்டமளிப்பு விழாவில் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தனது மகள் அன்ஷு ரோஜா செல்வமணியின் சாதனையை பெருமையுடன் குறிப்பிட்ட அவர், கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த வெற்றிக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

ரோஜா மகளே ராஜகுமாரி!.. வெளிநாட்டில் பட்டம் வாங்கிய அன்ஷு.. அம்மாவுக்கு செம ஹேப்பி!..

இந்த அன்னையர் தினம் எனக்கு மிகவும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. என் மகள் அன்ஷு அமேரிக்காவில் உள்ள Indiana university bloomington பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் சிறப்புப் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டத்தை டிஸ்டிங்ஷன் வாங்கி பெற்றார்.

மேலும், இந்தியானா பல்கலைக்கழகத்தின் ஹெர்மன் பி வெல்ஸ் சிறந்த மூத்த மாணவர் விருதைப் பெற்று, இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய மாணவி என்ற பெருமையைப் பெற்று, எங்கள் குடும்பத்திற்கும் இந்தியாவிற்கும் அவர் அளவற்ற பெருமையைக் கொண்டு வந்தார்.

ரோஜா மகளே ராஜகுமாரி!.. வெளிநாட்டில் பட்டம் வாங்கிய அன்ஷு.. அம்மாவுக்கு செம ஹேப்பி!..

பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில், சமத்துவம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மௌரீன் பிக்கர்ஸ் தலைமைத்துவ விருது, CEW&T 2026-இன் சிறந்த மாணவர் தலைவர் விருது, லட்டி கல்விச் சிறப்பு விருது, பலமுறை டீன்ஸ் லிஸ்ட் கௌரவங்கள், மற்றும் ஃபவுண்டர்ஸ் ஸ்காலர் அங்கீகாரம் உள்ளிட்ட பல மதிப்புமிக்க அங்கீகாரங்களைப் பெற்றார்.

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நற்பண்புகள் மூலம் தன் குழந்தை இத்தகைய உயரங்களை எட்டுவதைக் காண்பதை விட ஒரு தாய்க்கு சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது. இந்த அன்னையர் தினத்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சிறப்பாகவும் மாற்றியதற்கு தன் மகள் அன்ஷுவிற்கு நன்றி தெரிவித்திருந்தார் ரோஜா செல்வமணி.

ரோஜா மகளே ராஜகுமாரி!.. வெளிநாட்டில் பட்டம் வாங்கிய அன்ஷு.. அம்மாவுக்கு செம ஹேப்பி!..

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ரோஜா குடும்பத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web