×

காதல் கணவருடன் குஷ்பு வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ இணையத்தில் வைரல்!

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நடிகை குஷ்பு. தனது கெரியரில் 200 படங்களுக்கு மேல் நடித்த அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று பல மொழி படங்களில் தோன்றியிருக்கிறார். 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த அனைத்து நாயகர்களுடனும் குஷ்பு ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

 

சினிமா மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. சில தொலைக்காட்சி சீரியலகளிலும் நடித்த அவர் பல சீரியல்களை தயாரித்தும் உள்ளார். இவர் இயக்குநர் சுந்தர் சியை கடந்த 2000-ஆவது ஆண்டு திருமண செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தனது கணவர் சுந்தர் சியுடன் எடுத்த ரொமான்டிக் போட்டோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்து "காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை என்றும் என் சிறந்த மருந்து, என் சிறந்த பாதி என்றும் லவ்லி கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த கியூட் ரொமான்டிக் போட்டோ தற்ப்போது வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News