AK64: சம்பள விஷயத்தில் கறார் காட்டும் அஜித்!.. எஸ்கேப் ஆன புரடியூசர்!.. ஐயோ பாவம்...
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கிறார் என்கிற செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஏனெனில் அஜித்தை எப்படி திரையில் பார்க்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் ஆசைப்படுவார்களோ அதையெல்லாம் கச்சிதமாக படத்தில் காட்டியிருந்தார் ஆதிக்.
அஜித்துடன் தான் மீண்டும் இணைவதை உறுதி செய்த ஆதிக் குட் பேட் அக்லி போலவே இந்த படத்தையும் எடுக்கமாட்டேன். என்றெல்லாம் சொன்னார். அதேநேரம் இந்த படத்தை தயாரிப்பதற்கு கோலிவுட்டில் முன்னணியில் உள்ள எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. அதற்கு காரணம் அஜித் கேட்ட 185 கோடி சம்பளம்.
இத்தனைக்கும் விடாமுயற்சி படத்துக்கு அஜித் வங்கிய சம்பளம் 100 கோடி மட்டுமே. குட் பேட் அக்லி படத்திற்கு 110 முதல் 125 கோடி வரை வாங்கியிருக்கலாம் என்கிறார்கள். குட் பேட் அக்லி தியேட்டர் அதிபர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபம் என்றாலும் தயாரிப்பாளருக்கு 50 கோடிக்கும் மேல் நஷ்டம் என சொல்லப்பட்டது.

அப்படி இருந்தும் தனது சம்பளத்தில் 50 கோடியை தடாலென உயர்த்தி விட்டார் அஜித். ஆனால், அஜித்துக்கு தற்போதுள்ள வியாபாரத்தை கணக்கு போட்ட தயாரிப்பாளர்கள் ‘அஜித்துக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது.. அவர் சம்பளத்தை குறைத்தால் பேசலாம்’ என சொல்லி கதவை மூடிவிட்டார்கள். சன் பிக்சர்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஏஜிஎஸ் போன்ற பல தயாரிப்பாளர்களின் கதவை தட்டினார்கள். ஆனால் பாசிட்டிவான பதில் இல்லை.
அதன்பின் கோலிவுட்டில் பிரபல விநியோகஸ்தராக இருக்கும் ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. அதேநேரம் இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி என்பதால் அவ்வளவு பணத்தை ராகுலால் புரட்ட முடியாது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசினார்கள்.
இந்தப் படத்தின் அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்திலேயே வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில்தான் அதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது இந்த படத்திற்கான பணத்தை புரட்ட முடியாததால் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கிட்டத்தட்ட இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி இருந்தும் அஜித் தனது சம்பளத்தை குறைக்கவில்லை. தமிழ்நாட்டில் தனக்கு இவ்வளவு சம்பளத்தை கொடுக்க யாரும் தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்ட அஜித் தனது சகாக்களை மும்பைக்கு அனுப்பியிருக்கிறார். மும்பையில் யாராவது ஹிந்தி பேசும் தயாரிப்பாளர் கிடைப்பாரா என அவர்கள் தேடி வருகிறார்களாம்.
