×

ரூட், கோலியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்.. வைரலாகும் வீடியோ..!

சமீபத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பின்னர் நடைபெற்ற 3  ஆடிய இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

 
ajith

சமீபத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பின்னர் நடைபெற்ற 3  ஆடிய இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இதில் போட்டி முடிந்து வீரர்கள் அனைவரும் வெளியே வரும்பொழுது ரசிகர் ஒருவர் வலிமை, பீஸ்ட் அப்டேட் கேட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக அஜித், விஜய் உள்ளனர். இதில் அஜித் தற்போது வலிமை, விஜய் - பீஸ்ட் படத்தில் நடித்து வருகின்றனர். 

நேர்கொண்ட  பார்வை படத்தையடுத்து ஹெச்.வினோத் தற்போது மீண்டும் அஜித்தை வைத்து இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டிலே நடந்தது.

valimai

ஆனால், அதன்பின் ஓராண்டிற்கு மேலாக இப்படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மட்டுமல்லாது விளையாட்டு மைதானங்கள், அரசியல் ஊர்வலங்கள் என பொது இடங்களிலும் வலிமை அப்டேட் கேட்டு கொடி பிடிக்க துவங்கினர்.

இதனால் மனா உளைச்சலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள் இப்படி செய்ய வேண்டாம், விரைவில் அப்டேட் வெளியாகும் என அறிக்கை  விடுத்தார். இதையடுத்து இப்படத்தின் மோஷன் போஸ்டர், ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இந்த பிரச்னை தொடங்கியுள்ளது.

கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர் ஒருவர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட்டிடம் வலிமை மற்றும் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்கிறார். அதன்பின் இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடமும் அப்டேட் கேட்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News