×

வயலுக்கு போன 12 வயது சிறுமி - பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ரவுடி

12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

உத்தரப்பிரதேசம் பாரபங்கி மாவட்டத்தில் வசிக்கும் 12 வயது சிறுமி தனது அப்பாவிற்கு சொந்தமான வயலுக்கு விளையாட சென்றுள்ளார். அதன்பின் பிணமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

போலீசாரின் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அடல் என்கிற ரவுடி இந்த கொலையில் சம்பந்தப்படிருப்பது தெரியவந்துள்ளது. அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News