×

ரௌடி பேபிக்குப் பின் புட்ட பொம்மா – டிக்டாக்கில் வைராலும் வீடியோக்கள் !

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புட்டா பொம்மா பாடல் டிக்டாக்கில் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புட்டா பொம்மா பாடல் டிக்டாக்கில் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திரைப்படங்களில் ஹிட்டாகும் பாடல்கள் இப்போது டிக்டாக்கில் வித்தியாசமாக ரசிகர்களால் மீள் உருவாக்கம் செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது. கடந்த வருடம் தனுஷ் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ரௌடி பேபி பாடலுக்கு இது போல பலரும் தங்கள் பாணியில் நடனமாடி தங்கள் திறமையை வெளிக்காட்டினர்.

இந்நிலையில் இப்போது பொங்கலை முன்னிட்டு வெளியான அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லூ எனும் படத்தில் இடம்பெற்றுள்ள புட்டா பொம்மா என்ற பாடல் டிக்டாக்கில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலுக்கு அனைவரும் அல்லு அர்ஜுன் ஆடுவது போல நடனமாடி தங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News