×

அதுக்கு ஓகே!...ஆனா மாசம் ரூ.3 லட்சம்... ரவுடி பேபி சூர்யாவிடம் டீல் பேசும் இலக்கியா...

 
ilakkiya

டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர்கள் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா மற்றும் இலக்கியா. டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டு விட்டதால் மூவரும் யுடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில், ஆபாசமாக பேசுவதாக ஜி.பி.முத்து மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ilakkiya

அதேபோல் சூர்யாவும், இலக்கியாவும் யுடியூப்பில் ஆபாசமாக பேசியும், அரைகுறை ஆடையில் நடனமாடியும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, அவரது யுடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு புகார்கள் சென்றுள்ளது.

rowdy baby

இந்நிலையில் சூர்யாவும், இலக்கியாவும் செல்போனில் பேசிக்கொள்ளும் ஆடியோ இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இலக்கியாவை தொடர்பு கொள்ளும் சூர்யா அவரிடம் ‘சர்வீஸ்’(விபச்சாரம்) என்கிற வார்த்தையில் பேரம் பேசுகிறார். ‘நான் சிங்கப்பூர் செல்கிறேன். நீ வருகிறாயா?’ என சூர்யா கேட்க, அதற்கு இலக்கியா ‘எதற்கு? நடன நிகழ்ச்சியா?’ என கேட்கிறார். ‘நடன நிகழ்ச்சியெல்லாம் இல்லை. சர்வீஸுக்குதான்.. உனக்கு எவ்வளவு பனம் வேண்டும் சொல் நான் வாங்கி தருகிறேன்’ என சூர்யா கேட்க, இங்கு நான் ஒருவருடன் 2 மணி நேரம் இருக்கவே ரூ.1 லட்சம் வாங்குகிறேன். சிங்கப்பூர் என்றால் அதிகம் வேண்டும்’ என இலக்கியா கேட்க, ‘சரி மாதம் ரூ.3 லட்சம் பேசுகிறேன். 2 மாதத்திற்கு ரூ.6 லட்சம். சர்வீஸ் இல்லை என்றாலும் பணம் கொடுத்துவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை பணம் கொடுப்பார்கள். மற்ற செலவுகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்’ என இலக்கியாவிடம் சூர்யா டீல் பேசும் ஆடியோ லீக் ஆகியுள்ளது.

ilakkiyia

இந்த ஆடியோ பற்றி கருத்து தெரிவித்த சூர்யா முதலில் ‘அது நான் இல்லை’ என்றார். அதன்பின், நான் பேசியதையும், இலக்கியா பேசியதையும் தனித்தனியாக ஒட்டவைத்து ஆடியோவாக மாற்றிவிட்டனர் என்றார். பின்னர், ஆமாம், இது நாங்கள் பேசிக்கொண்டதுதான்.. நான் யாரையும் வற்புறுத்தவில்லை. விருப்பத்தின் பெயரில்தான் இதை செய்கிறோம்’ என ஒப்புக்கொண்டுள்ளார்.

rowdy baby

இதையடுத்து, இளைஞர்களை சீரழிக்கும் விதமாக நடந்துகொள்ளும் இலக்கியா மற்றும் ரவுடி பேபி மீது சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் புகார்கள் குவிந்து வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News